Tuesday, June 7, 2011

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!!!


'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'. உடல்நலம் ஆரோக்கியமாக இருந்தால்தான் நாம், நம் கடமைகளை சிறப்பாகச் செய்ய முடியும். எந்த ஒரு சின்ன நோய்க்கும், வலிக்கும் மருத்துவமனைகளுக்கு செல்வது, மாத்திரைகள், மருந்துகள் ஆகியவற்றை உட்கொள்வது போன்ற பழக்கங்கள் தோன்றிவிட்டன. மருத்துவர்களின் ஆலோசனை இன்றியும், அவரவராகவே தங்களுக்குத் தெரிந்த மாத்திரைகளை கடைகளில் வாங்கி சாப்பிடும் பழக்கமும் பலரிடம் உள்ளது. இது மிகவும் ஆபத்தானது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். 

முன் காலத்தில் நம் வீட்டுப் பெரியவர்கள், வீட்டிலேயே மூலிகைகள், நாட்டு மருந்துகள், சமையல் பொருட்கள் இவற்றிலிருந்து நோய்க்கு பொருத்தமான கஷாயங்கள், பற்று போடுதல், களிம்புகள் தயாரித்தல் ஆகியவற்றை மேற்கொண்டனர். இதனால் தீங்கு தரும் பின் விளைவுகள் இல்லாத நல்ல பலன் கிடைத்தது. மாறிவரும் இந்த நவீன காலத்தில் வீட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம், கை வைத்தியம் ஆகிய வழி முறைகள் மறைந்து வருகின்றன. 

வீட்டிலேயே செய்து கொள்ளும் இந்த எளிய கை வைத்திய குறிப்புகள் பற்றி மக்களுக்கு ஆர்வம் உண்டாக வேண்டும், அனுபவமும், பலனும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பதிவை உங்களுக்காக சமர்ப்பிக்கிறேன்...

தலைமுடி ஆரோக்கியம் 

மாதம் ஒருமுறை மருதாணி இலைகளை அரைத்து தலைக்குத் தேய்த்தால் நல்ல குளிர்ச்சி கிடைத்து, தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.


வாரத்திற்கு 2 முறைகள் நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து வந்தால், முடி உதிராது. செம்பருத்தி இலைகளை அரைத்து சீயக்காயுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தல் ஷாம்பு மாதிரி இருக்கும். நல்ல குளிர்ச்சி கிடைத்து முடி வளரும்.
முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து தலைக்குத் தடவி 15 நிமிடம் ஊறியபின் தலைக்கு சிகைக்காய் தேய்த்துக் குளித்தால் தலைமுடி மிகவும் மிருத்டுவாக இருக்கும், முடி உதித்தாலும் நிற்கும். 

தலைவலி 
1/2 டம்ளர் வெந்நீரில், 1/2 எலுமிச்சம்பழம் பிழிந்து 2 கல் உப்பு போட்டு குடித்தால் தலைவலி குணமாகும்.

காய்ச்சலும் தலைவலியும் சேர்ந்து வந்தால் கடுகை அரைத்து உள்ளங்காலில் பற்றுப் போட்டால் தலைவலி, காய்ச்சல் நீங்கி விடும்.

கண் 

தினமும் 3 தடவைகளாவது கண்களைக் கழுவ வேண்டும். 

பொன்னாங்கண்ணிக்கீரை, முருங்கைக்கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், கண் பார்வை நன்றாக இருக்கும். 

முட்டையின் வெள்ளைக் கருவை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் கண்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். 

தூக்கம் 

இரவு உணவை முடித்தபின் 1 தேக்கரண்டி தேன் அல்லது மிதமான சூட்டில் 1 டம்ளர் பால் சாபிட்டால் நிம்மதியான தூக்கம் வரும். 

தினமும் மாலையில் 6 மணிக்குள் வேலையை முடித்து அரை மணிநேரம் நடைப் பயிற்சி செய்து, 7 மணிக்கும் சாப்பிட்டு முடித்து, இரவில் குளித்து விட்டுப்படுத்தால் நிம்மதியான தூக்கம் வரும். 

பல்வலி 

பல் வலி வந்தால் ஒரு பூண்டை உரித்து, மணிக்கட்டில் நாடித்துடிப்பு இருக்கும் இடத்தில் வைத்துக் கட்ட வேண்டும். இடது பக்கம் பல்லில் வலி இருந்தால் வலதுபுற மணிக்கட்டிலும், வலது பக்கம் பல்லில் வலி இருந்தால் இடது மணிக்கட்டிலும் கட்டுப் போட வேண்டும்.

சிறிது எலுமிச்சைச் சாறுடன் உப்புத்தூள் கலந்து கரை உள்ள இடங்களில் தேய்த்தால், பற்களில் உள்ள கரை நீங்கி விடும். 

ஜலதோஷம் 

வெதுவெதுப்பான பீட்ரூட் சாற்றை மூக்கினுள் தடவினால் ஜலதோஷம் சரியாகிவிடும். 

தேன் ஜலதோசத்தை குணப்படுத்தும்.


இருமல், தும்மல் 

இருமல், தும்மல், காய்ச்சல் ஆரம்பமானவுடன் 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் சளி கரையும். தும்மல் நின்று, மூக்கில் தண்ணீர் வடிவது நிற்கும். இருமலைக் கட்டுப்படுத்தும். 

கடுமையான இருமலாக இருந்தாலும், 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் வேறு அலோபதி மருந்துகள் இல்லாமல் இருமல் நிற்கும்.

அடி வயிற்று வலி 

அடி வயற்றில் வழிக்குக் காரணம் உடம்பு சூடாக இருப்பதுதான். காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தியத்தை எடுத்து வாயில் போட்டு விழுங்கி, சிறிது மோர் குடித்து வந்தால் உடனே நிவாரம் கிடைக்கும். 

வயிற்றுப்போக்குக்கு ஓமப்பூ கடுகளவு சாப்பிட்டால் குணமாகும். 

மலச்சிக்கல் 

மலச்சிக்கல்தான் உடம்பில் வரும் அத்தனை வியாதிகளுக்கும் மூல காரணம். தினமும் காலையில் எழுந்ததும் சுலபமாக மலம் கழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 

மலச்சிக்கல் நீங்க தினமும் இரவு படுக்கும்முன் 1 வாழைப்பழம் (மொந்தை) சாப்பிட வேண்டும். 

ஒரு டம்ளர் வெந்நீரில், 1 தேக்கரண்டி தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் மலச்சிக்கல் குணமாகும். 

மலேரியா 

மலேரியாவால் தாக்கப்பட்டவர்கள் தினமும் துளசி இலையை சிறிதளவு காலையில் வெறும் வயிற்றில் மென்று விழுங்கி வந்தால் ஓரிரு நாட்களில் நோய் நீங்கிவிடும். 

தேள் கொட்டுதல் 

தேள் கொட்டினால், கொட்டிய இடத்தில் சுண்ணாம்பை தடவ வேண்டும். 3 கிராம்புகளை மென்று சாப்பிட்டால் விஷம் இறங்கிவிடும். கொட்டின இடம் வீங்கினாலும் வற்றிவிடும். மஞ்சளையும் சுண்ணாம்பையும் கலந்து கடிவாயில் தடவினால் வழியும் வீக்கமும் மறைந்துவிடும். 

உடல் பருமன் 

வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.

தேன் உடல் பருமனைக் குறைக்கும். தேனுடன் குளிர்ந்த தண்ணீரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும். 

தீக்காயங்கள் 


தீக்காயம் பட்டவுடன் முதலில் தண்ணீரில் கழுவ வேண்டும்.

தீப்பட்ட புண்ணின்மேல் தொடர்ந்து தேன் தடவி வந்தால் புன் குணமாகி விடும். தீக்காயங்களை ஆற்றுவதற்கு தேன் உகந்தது. வலி நீங்கும். தீக்கொப்புளங்கள் ஏற்படாமல் தடுக்கும்.  

முக அழகுக் குறிப்புகள் 

ஒரு தேக்கரண்டி கசக்கசாவை தண்ணீருடன் சேர்த்து, அரைத்து முகத்தில் பூசி 
1/2 மணி நேரம் கழித்து வேத வெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகம் 'பளிச்' என்று இருக்கும். 

வெள்ளரிக்காயை மிக்சியில் அடித்து அதை முகத்தில் தடவி 1/2 மணி நேரம் அல்லது 1 நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும். 

இரவில் படுக்கும்முன் முகத்திற்கு வெண்ணை தடவலாம். பகலிலும் தடவலாம். ஆனால் தடவிய பிறகு, வெயிலில் போகக் கூடாது. 

எலுமிச்சைச் சாற்றில், பாசிப்பயற்று மாவு கலந்து முகத்தில் தடவி வைத்து, 1 நேரம் கழித்து கழுவினால் முகம் நிறம் பெரும். 

இளமை 

இஞ்சி, சுக்கு, கடுக்காய் இந்த மூன்றையும் பக்குவம் செய்து தினமும் 3 வேலை சாப்பிட்டு வந்தால் என்றும் இளமை உணர்வுடன் இருக்கலாம். 

தினமும் தேகப்பயிற்சி செய்வதும், அளவான உணவு உட்கொள்வதும் இளமையாக இருக்க உதவுகிறது. 

முகச் சுருக்கம் 

அதிகமாக மனதில் கவலைப்பட்டுக் கொண்டு இருப்பவர்களுக்கு முகச் சுருக்கம் அதிக அளவில் உண்டாகும்.

எப்போதும் இனிமையான சிந்தனைகள் இருந்தால் முகம் அழகாக இருக்கும். 
முகச் சுருக்கம் மறைந்து விடும். 

முக அழகிற்கும் தோலின் பராமரிப்பிற்கும் பழங்கள் சாப்பிட வேண்டும் அல்லது பழச்சாறு குடிக்க வேண்டும். 

தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். 

தினமும் உடற்பயிற்சி தவறாமல் செய்ய வேண்டும். 

தோலில் உள்ள செல்களை புதுப்பிக்கவும் முகத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றவும் தக்காளிச் சாற்றை முகத்தில் தடவ வேண்டும். 

முகப்பரு 

முகத்தை முதலில் வெந்நீரில் கழுவிய பின் உடனே குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பிறகு பாசிப்பயற்று மாவில் எலுமிச்சை சாறு ஊற்றி கலந்து முகத்தில் தடவி 1/2 மணி அல்லது 1 மணி நேரம் ஊற வைத்துக்  கழுவினால் பருக்கள் மறைந்து விடும்.

ஒரு தேக்கரண்டி பால், 1 தேக்கரண்டி தேன் இரண்டையும் நன்றாகக் கலக்கி, முகத்தில் தேய்த்து 1/2 மணி நேரம் கழுவினால் முகப்பரு மறையும். 

குழந்தைச் செல்வம் 

கணவன், மனைவி இருவரும் உலர்ந்த பழங்களை (பேரிச்சம்பழம், கிஸ்மிஸ் பழம், அத்திப்பழம்) தினமும் சாப்பிட வேண்டும். துளசி சாப்பிடக் கூடாது. மாத விலக்கில் இருந்து 14 ஆம் நாள் சேர்ந்திருந்தால் குழந்தை பிறக்கும். 




No comments:

Post a Comment