Wednesday, June 15, 2011

பேஸ்புக் (Facebook)



இன்றைக்கு உலகில் முதலிடத்தில் இருக்கும் சமூக வலையமைப்பு பேஸ்புக்தான் . பேஸ்புக் இங்க் எனும் நிறுவனத்தின் கீழ் இயங்கும் இந்த வலைத்தளம் 2004 - ஆம் ஆண்டு ஆரம்பமானது. மார்க் எலியட் ஷுகர்பெர்க் என்பவர் தனது நண்பர்கள் டஸ்டின் மாஷ்கேவிச் எடுராடோ சாவரின், கிரிஷ்ஹியூக்ஸ் ஆகியோருடன் இணைந்து இந்தத் தளத்தை உருவாக்கினார். தான் படித்த ஹார்வேட் பல்கலைக் கழகத்தில் விளையாட்டாய் உருவாக்கிய இந்தத் தளம் இன்று உலகெங்கும் பரவி 500 மில்லியன் பயன்பாட்டாளர்களுடன் பிரமிப்பூட்டுகிறது.  


தினமும் குறைந்த பட்சம் இரண்டு இலட்சம் பேர் இதில் புதிதாக இணைகிறார்கள். பேஸ்புக் இங்க் நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பலோ ஆல்டோ எனுமிடத்தில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு இலாபம் மட்டும் 800 மி. டாலர்கள்! இளைஞர்களின் இணைய உலகில் முக்கிய இடம் பேஸ்புக்கிற்கு உண்டு. இந்த நிறுவனத்தின் கால்வாசி பங்குகளுக்குச் சொந்தக்காரராக இருக்கும் நிறுவனர் மார்க்கின் வயது என்ன தெரியுமா?  இருபத்தியாறு!  



1 comment:

  1. HI i am anyone ...international its my owned...i am Facebook partner...my all mack moneys released me emerged...my true facebook work place join me network ...please help me..my all international organization s...join me emerged...Facebook. com

    ReplyDelete