Wednesday, March 23, 2011

அசெம்பிள்ட் vs பிராண்டட் (எந்த கம்ப்யூட்டர் லாபம்?)


எந்த கம்ப்யூட்டர் லாபம்?

ஒரு பக்கம் லேப்டாப் , நோட்பேட் என்று டெக்னாலஜி எங்கோயோ போய்க்கொண்டிருந்தாலும், டெஸ்க்டாப்புக்கான தேவையும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வாங்கும்பட்சத்தில் அது மூன்று விதங்களில் கிடைக்கிறது.

1 . பிராண்டட்  டெஸ்க்டாப் - பன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்தவை.
2 . பிராண்டட்  டெஸ்க்டாப் - இந்திய நிறுவனங்கள் தயாரித்தவை.
3. அசெம்பிள்ட் டெஸ்க்டாப் என்றழைக்கப்படுகின்ற லோக்கல் தயாரிப்புகள்.

   எல்லா கம்ப்யூட்டர்களும் அசெம்பிள்ட் கம்ப்யூட்டர்கள்தான்... அப்புறம் எதற்கு பிராண்டட் டெஸ்க்டாப்பை வாங்க வேண்டும் என்று சொல்பவர்களும் உண்டு. தெரியாத்தனமா  அசெம்பிள்ட் கம்ப்யூட்டரை வாங்கி இப்ப அவஸ்த்தைப்படறேன் என்று புலம்புபவர்களும் உண்டு. ஆனால் எதை வாங்குவது லாபகரமாக இருக்கும்? ஒரு அலசல்....

*  பிராண்டட் கம்ப்யூட்டர்:

1. தரம் பற்றி சந்தேகமே வேண்டாம்.
2. ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் ஒரே இடத்தில் நமக்கு அத்தனை சேவையும் கிடைக்கும்.
3. எல்லா உதிரிப்பாகங்களும் இணைந்து கம்ப்யூட்டரை சோதனை செய்த பிறகே விற்பனைக்கு விடுப்பார்கள்.
4. அதிக விலையுள்ள மாடல்களை வாங்கும்போது ஆப்பெரேடிங் சிஸ்டம் வாங்குவதைவிட இது லாபமாகவே இருக்கும்.
5. புதிதாக வந்திருக்கும் All-In-One கம்ப்யூட்டர் மாடல்கள் (இதில் CPU தனியாக இருக்காது. மானிடர், ஹார்டுடிஸ்க், ராம் எல்லாம் ஒன்றிணைந்து இருக்கும்)  அசெம்பிள்ட்-ஆகக் கிடைக்காது.
6. வீட்டுக்கே வந்து சர்வீஸ் செய்து கொடுக்கும் 'ஆன் செட் வாரண்டி' வசதியும் சில நிறுவனங்களில் கிடைக்கும்.

அசெம்பிள்ட் கம்ப்யூட்டர்:



1. நமக்கு விருப்பமான, தேவையான நிறுவனங்களின் உதிரிப்பாகங்களை வாங்கி அசெம்பிள் செய்து கொள்ளலாம்.
2. பிராண்டட் கம்ப்யூட்டரைவிட 10 முதல் 15% வரை விலை குறைவாகக் கிடைக்கும். 
3. ஒவ்வொரு உதிரிப்பாகங்களுக்கும் தனித்தனியாக வாரண்டி வாங்கலாம்.
4. புதிய தொழில்நுட்பம் வரும்போது, நம் தேவையைப் பொறுத்து நாமே சில உதிரிப்பாகங்களை மாற்றி அப்டேட் செய்து கொள்ளலாம்.
5. நமக்குத் தேவையான ஆப்பெரேடிங் சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
6. கம்ப்யூட்டர்களின் விலையை முடிவு செய்வது பிராசசர்கல்தான். நமக்குத் தேவையான  பிராசசரை வாங்கிக்கொள்ளலாம்.


  ஆக மொத்தத்தில் பிராண்டட்தான் உசத்தி என்று நினைத்து, அதிக பணம் செலவழிக்கத் தேவையுமில்லை, இளக்காரமாக நினைத்து அசெம்பிள்ட் கம்ப்யூட்டரை ஒதுக்கவும் தேவையில்லை என்பதே இன்றைய நிலைமை! அதேசமயம் நீண்ட நாள் உழைக்கும் என்ற எண்ணத்தில் பிராண்டட் வாங்க நினைத்தால் கொஞ்சம் யோசித்துக்கொல்வது நல்லது. காரணம் இன்றைக்கு எந்த கம்ப்யூட்டராக இருந்தாலும் சரி, மூன்று நான்கு வருடங்களுக்குள் அவுட்டேட்டட் ஆகி விடுவதுதான். அது மட்டுமல்ல, விற்க நினைத்தால் எந்த கம்ப்யூட்டராக இருந்தாலும் ரீசேல் வேல்யூ பெரிதாக இருக்காது.

 பிராண்டட் vs டெஸ்க்டாப் ஓர் ஒப்பீடு.

 பிராண்டட்
* இன்டெல் கோர் 2 டியோ - 2.93 ஜிகா ஹெர்ட்ஸ்

   இன்டெல் ஜி.41 சிப்செட் மதர்போர்டு.

* 2  ஜிகா பைட் டி.டி.ஆர். 3  ராம் 

* 320 ஜிகா பைட் ஹார்டுடிஸ்க் 

* 18.5 இன்ச் டி.எப்.சி மானிடர் 

* டி.வி.டி ரைட்டர்.

* ஸ்பீக்கர் 

* கீபோர்டு மற்றும் மௌஸ்

* யூ.பி.எஸ்  


    இவை மொத்தத்திற்கும் மூன்று வருட வாரண்டி.
   விலை 28,000 முதல் கிடைக்கும். விலை பிராண்டுக்கு பிராண்ட் மாறுபடும் 

அசெம்பிள்ட் கம்ப்யூட்டர்:


 இன்டெல் கோர் 2 டியோ
     2.93 ஜிகா ஹெர்ட்ஸ் - Rs.5,500
 *  இன்டெல் ஜி.41 சிப்செட் மதர்போர்டு - Rs.3,500
 *  2  ஜிகா பைட் டி.டி.ஆர். 3  ராம் - Rs.3,200
 *  320 ஜிகா பைட் ஹார்டுடிஸ்க் - Rs.2,300
 *  18.5 இன்ச் டி.எப்.சி மானிடர் - Rs.6,000
 *  டி.வி.டி ரைட்டர் - Rs.1300
 *  ஸ்பீக்கர் - Rs.450
 *  கீபோர்டு மற்றும் மௌஸ் - Rs.650
 *  யூ.பி.எஸ் - Rs.1,800 

 *  மொத்தம் - Rs.24,700  
 
      தரமான நிறுவனங்களின் மதிப்பீடுதான் கொடுக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் இது தோராயமான விலையே. இந்த விலை கடைக்குக் கடை மாறுபடும். சுமாராக 13% வரை அசெம்பிள்ட் கம்ப்யூட்டர் வாங்குவதன் மூலம் சேமிக்கலாம்.


1 comment: