Thursday, March 10, 2011

மகளிர் நாள்


என்னை கருவில் சுமந்து
உயிரை உருக்கி என்னை
 உருவாக்கிய தாய்மைக்காக சமர்ப்பித்து ,
பெண் என்ற பெருமையுடன்
 உங்களிடம் ஒரு சில வார்த்தைகள் .
குகூ குரலுடன் பிறந்தநாள் முதல்
 தன் மகன் எறிக்க பெருமிதத்துடன்
 இறக்கும் வரை பெண்மையே!
நீ தினந்தோறும் உன்னை
அறியாமல் செய்யும் சாதனைகள் தான் எத்தனையோ!
அதற்கு நீ எதிர்பார்க்கும் பரிசு
 அன்பு தானே! அன்பு மட்டும்தானே!!
பெண்மையே வாழ்கையின் ஓட்டத்தில்
உறவின் வளமைக்காக
 பெரிய சோதனைகளையும், பெரிய வலிகளையும்
 உன் மன வலிமையோடும்
சின்ன சின்ன சினுக்களோடும்
நீ சமாளித்த சூட்சமத்திற்கு
 நம் நாட்டு தலைவர்களும் அல்லவா
 யாசகம் கேட்க வேண்டும்
பெண்மையே நீ ஜனிக்க வைத்த
 உனது பிள்ளைகளுக்காக
உன்னுள் சரிபாதியான 
உனது கண்ணாலனுக்காக
உனக்காக தன் வாழ்க்கையே
மெழுகாய் உருக்கிய பெற்றோருக்காக 
என நீ எடுத்த அவதாரங்கள் தான் எத்தனை எத்தனையோ!
உந்தன் வாழ்க்கை சக்கரத்தில்
 உனக்கு நீயே ஆறுதலாய், உனக்கு நீயே உற்சாகமாய்
நீயே நீயே என்று இயங்கும் இவ்வுலகம் 
உனக்காக பெருமிதமாய் கொண்டாடும் நாள் தானே இன்று....!
 பெருமைப்படு பெண்மையே!
  பெண்ணாக பிறந்ததற்கு........!
                                                                               - ஐஸ்வர்யா உமாசங்கர் 
                                                                                  Postal Asst. - 2011 batch
                                                                                  சேலம்.

1 comment:

  1. that beautiful kavithai about women's day wrote by my postal trainee student.....!

    ReplyDelete