Wednesday, March 23, 2011

அசெம்பிள்ட் vs பிராண்டட் (எந்த கம்ப்யூட்டர் லாபம்?)


எந்த கம்ப்யூட்டர் லாபம்?

ஒரு பக்கம் லேப்டாப் , நோட்பேட் என்று டெக்னாலஜி எங்கோயோ போய்க்கொண்டிருந்தாலும், டெஸ்க்டாப்புக்கான தேவையும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வாங்கும்பட்சத்தில் அது மூன்று விதங்களில் கிடைக்கிறது.

1 . பிராண்டட்  டெஸ்க்டாப் - பன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்தவை.
2 . பிராண்டட்  டெஸ்க்டாப் - இந்திய நிறுவனங்கள் தயாரித்தவை.
3. அசெம்பிள்ட் டெஸ்க்டாப் என்றழைக்கப்படுகின்ற லோக்கல் தயாரிப்புகள்.

   எல்லா கம்ப்யூட்டர்களும் அசெம்பிள்ட் கம்ப்யூட்டர்கள்தான்... அப்புறம் எதற்கு பிராண்டட் டெஸ்க்டாப்பை வாங்க வேண்டும் என்று சொல்பவர்களும் உண்டு. தெரியாத்தனமா  அசெம்பிள்ட் கம்ப்யூட்டரை வாங்கி இப்ப அவஸ்த்தைப்படறேன் என்று புலம்புபவர்களும் உண்டு. ஆனால் எதை வாங்குவது லாபகரமாக இருக்கும்? ஒரு அலசல்....

*  பிராண்டட் கம்ப்யூட்டர்:

1. தரம் பற்றி சந்தேகமே வேண்டாம்.
2. ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் ஒரே இடத்தில் நமக்கு அத்தனை சேவையும் கிடைக்கும்.
3. எல்லா உதிரிப்பாகங்களும் இணைந்து கம்ப்யூட்டரை சோதனை செய்த பிறகே விற்பனைக்கு விடுப்பார்கள்.
4. அதிக விலையுள்ள மாடல்களை வாங்கும்போது ஆப்பெரேடிங் சிஸ்டம் வாங்குவதைவிட இது லாபமாகவே இருக்கும்.
5. புதிதாக வந்திருக்கும் All-In-One கம்ப்யூட்டர் மாடல்கள் (இதில் CPU தனியாக இருக்காது. மானிடர், ஹார்டுடிஸ்க், ராம் எல்லாம் ஒன்றிணைந்து இருக்கும்)  அசெம்பிள்ட்-ஆகக் கிடைக்காது.
6. வீட்டுக்கே வந்து சர்வீஸ் செய்து கொடுக்கும் 'ஆன் செட் வாரண்டி' வசதியும் சில நிறுவனங்களில் கிடைக்கும்.

அசெம்பிள்ட் கம்ப்யூட்டர்:



1. நமக்கு விருப்பமான, தேவையான நிறுவனங்களின் உதிரிப்பாகங்களை வாங்கி அசெம்பிள் செய்து கொள்ளலாம்.
2. பிராண்டட் கம்ப்யூட்டரைவிட 10 முதல் 15% வரை விலை குறைவாகக் கிடைக்கும். 
3. ஒவ்வொரு உதிரிப்பாகங்களுக்கும் தனித்தனியாக வாரண்டி வாங்கலாம்.
4. புதிய தொழில்நுட்பம் வரும்போது, நம் தேவையைப் பொறுத்து நாமே சில உதிரிப்பாகங்களை மாற்றி அப்டேட் செய்து கொள்ளலாம்.
5. நமக்குத் தேவையான ஆப்பெரேடிங் சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
6. கம்ப்யூட்டர்களின் விலையை முடிவு செய்வது பிராசசர்கல்தான். நமக்குத் தேவையான  பிராசசரை வாங்கிக்கொள்ளலாம்.


  ஆக மொத்தத்தில் பிராண்டட்தான் உசத்தி என்று நினைத்து, அதிக பணம் செலவழிக்கத் தேவையுமில்லை, இளக்காரமாக நினைத்து அசெம்பிள்ட் கம்ப்யூட்டரை ஒதுக்கவும் தேவையில்லை என்பதே இன்றைய நிலைமை! அதேசமயம் நீண்ட நாள் உழைக்கும் என்ற எண்ணத்தில் பிராண்டட் வாங்க நினைத்தால் கொஞ்சம் யோசித்துக்கொல்வது நல்லது. காரணம் இன்றைக்கு எந்த கம்ப்யூட்டராக இருந்தாலும் சரி, மூன்று நான்கு வருடங்களுக்குள் அவுட்டேட்டட் ஆகி விடுவதுதான். அது மட்டுமல்ல, விற்க நினைத்தால் எந்த கம்ப்யூட்டராக இருந்தாலும் ரீசேல் வேல்யூ பெரிதாக இருக்காது.

 பிராண்டட் vs டெஸ்க்டாப் ஓர் ஒப்பீடு.

 பிராண்டட்
* இன்டெல் கோர் 2 டியோ - 2.93 ஜிகா ஹெர்ட்ஸ்

   இன்டெல் ஜி.41 சிப்செட் மதர்போர்டு.

* 2  ஜிகா பைட் டி.டி.ஆர். 3  ராம் 

* 320 ஜிகா பைட் ஹார்டுடிஸ்க் 

* 18.5 இன்ச் டி.எப்.சி மானிடர் 

* டி.வி.டி ரைட்டர்.

* ஸ்பீக்கர் 

* கீபோர்டு மற்றும் மௌஸ்

* யூ.பி.எஸ்  


    இவை மொத்தத்திற்கும் மூன்று வருட வாரண்டி.
   விலை 28,000 முதல் கிடைக்கும். விலை பிராண்டுக்கு பிராண்ட் மாறுபடும் 

அசெம்பிள்ட் கம்ப்யூட்டர்:


 இன்டெல் கோர் 2 டியோ
     2.93 ஜிகா ஹெர்ட்ஸ் - Rs.5,500
 *  இன்டெல் ஜி.41 சிப்செட் மதர்போர்டு - Rs.3,500
 *  2  ஜிகா பைட் டி.டி.ஆர். 3  ராம் - Rs.3,200
 *  320 ஜிகா பைட் ஹார்டுடிஸ்க் - Rs.2,300
 *  18.5 இன்ச் டி.எப்.சி மானிடர் - Rs.6,000
 *  டி.வி.டி ரைட்டர் - Rs.1300
 *  ஸ்பீக்கர் - Rs.450
 *  கீபோர்டு மற்றும் மௌஸ் - Rs.650
 *  யூ.பி.எஸ் - Rs.1,800 

 *  மொத்தம் - Rs.24,700  
 
      தரமான நிறுவனங்களின் மதிப்பீடுதான் கொடுக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் இது தோராயமான விலையே. இந்த விலை கடைக்குக் கடை மாறுபடும். சுமாராக 13% வரை அசெம்பிள்ட் கம்ப்யூட்டர் வாங்குவதன் மூலம் சேமிக்கலாம்.


Who am I today?

                  "Who am i today'? I ask.
                   And  I wonder if I'll ever know;
                   I know the past has shaped me now,
                   Though the past was long ago.
                   The little moments form a blur,
                   The times both happy and sad,
                   All the people I once knew,
                   And the things I used to have.
                   They all helped me to become
                   Where, what, and who I am now,
                   And everything has influenced me
                   Though I'm not sure exactly how.

                   But I'm thankful for the memories,
                   From everyone I've ever met-
                   People I miss and people I love,
                   Even people I'd like to forget.
                   For these memories have helped me grow,     
                   They've made me calm, yet strong,
                   And now there's a story to my life,
                   That they've been writing all along.
                   So, thank you for the memories,
                   Without them, who would I be?-
                   Because somewhere in my memories
                   Are the things that define me..........!
                                     
                                                                  
              









Saturday, March 12, 2011

என்னுள் வாழ்பவர்கள்

 திருவள்ளுவர் 
                                
                                               கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
                                         மாடல்ல மற்றை யவை.
                                       மகாகவி பாரதியார் 
                                                         உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,                                                          அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
                                                                                     பூலித்தேவன் 
         இந்திய மண்ணில் ஆங்கிலேயரை எதிர்த்த முதல் சுதந்திர போராட்ட தியாகி 
                                                                              ராஜ ராஜ சோழன் 
                                                                        சிறந்த சோழ மன்னன் 
                                                                     நேதாஜி 
நேதாஜி என்று இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ்
                                                                                            பகத் சிங்
                                                            மாவீரன் பகத் சிங் 
                 
                                                               தந்தை பெரியார் 
      
                                                         சமூக சீர்திருத்தவாதி 
                                                        கர்மவீரர் காமராஜர் 
                                                         கல்வி கண் திறந்தவர்
                                                                      கக்கன் 
                                                    நேர்மை + எளிமை = கக்கன் 
                                                           அன்னை தெரேசா 
                                                     பிறர் அன்பின் பணியாளர் 
                                                                  சே குவாரா 
                        எங்கே அநீதியை கண்டாலும் உன் மனம் தாங்க முடியாமல் துடித்தெழுகிறதா??                         அப்படியானால் நீயும் என் நண்பன் தான் - சே குவேரா
                                                                            நெல்சன் மண்டேலா 
         நிறவெறிக்கு எதிராக போராடிய முக்கிய தலைவர்களில் ஒருவர் 
                                               வேலுப்பிள்ளை பிரபாகரன் 
 
                                                    ஈழத்தமிழினப் போராளி 

Thursday, March 10, 2011

கல்லூரிப்பருவம்



                   எனது இளங்கலை பட்டப்படிப்பு தோழர்கள் . இடம்-புதுவை .

                          
                            கார்கில் உயிர் நீத்தோர் நினைவுச்சின்னம் - புதுவை 

                
                                   புதுவை சட்டமன்ற சாலையில் நடைபயணம் 

                                                 
                                                           கடற்கரை-புதுவை   

                                         
                                                                 பூம்புகார்      

                                 
                                                        கடற்கரை-பூம்புகார் 

                                                  மகாமகம்-கும்பகோணம் 

                          
                                                              திருநள்ளாறு 

           
                                                       வேளாங்கண்ணி  

                                           
                                                 கடற்கரை-வேளாங்கண்ணி                   

மகளிர் நாள்


என்னை கருவில் சுமந்து
உயிரை உருக்கி என்னை
 உருவாக்கிய தாய்மைக்காக சமர்ப்பித்து ,
பெண் என்ற பெருமையுடன்
 உங்களிடம் ஒரு சில வார்த்தைகள் .
குகூ குரலுடன் பிறந்தநாள் முதல்
 தன் மகன் எறிக்க பெருமிதத்துடன்
 இறக்கும் வரை பெண்மையே!
நீ தினந்தோறும் உன்னை
அறியாமல் செய்யும் சாதனைகள் தான் எத்தனையோ!
அதற்கு நீ எதிர்பார்க்கும் பரிசு
 அன்பு தானே! அன்பு மட்டும்தானே!!
பெண்மையே வாழ்கையின் ஓட்டத்தில்
உறவின் வளமைக்காக
 பெரிய சோதனைகளையும், பெரிய வலிகளையும்
 உன் மன வலிமையோடும்
சின்ன சின்ன சினுக்களோடும்
நீ சமாளித்த சூட்சமத்திற்கு
 நம் நாட்டு தலைவர்களும் அல்லவா
 யாசகம் கேட்க வேண்டும்
பெண்மையே நீ ஜனிக்க வைத்த
 உனது பிள்ளைகளுக்காக
உன்னுள் சரிபாதியான 
உனது கண்ணாலனுக்காக
உனக்காக தன் வாழ்க்கையே
மெழுகாய் உருக்கிய பெற்றோருக்காக 
என நீ எடுத்த அவதாரங்கள் தான் எத்தனை எத்தனையோ!
உந்தன் வாழ்க்கை சக்கரத்தில்
 உனக்கு நீயே ஆறுதலாய், உனக்கு நீயே உற்சாகமாய்
நீயே நீயே என்று இயங்கும் இவ்வுலகம் 
உனக்காக பெருமிதமாய் கொண்டாடும் நாள் தானே இன்று....!
 பெருமைப்படு பெண்மையே!
  பெண்ணாக பிறந்ததற்கு........!
                                                                               - ஐஸ்வர்யா உமாசங்கர் 
                                                                                  Postal Asst. - 2011 batch
                                                                                  சேலம்.